நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறுமூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்டுங்காலங் கண்டானடி காணலு மாமே.
பாடல் 1704 — உரைVerse 1704 — meaning
நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்தச் சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுத்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளைக் காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியைக் கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில், வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில், பிறவிக்குக் காரணமாகிய நல்வினை தீவினை ஆகிய இரண்டும் நீங்கிவிட, காலத்தைப் படைத்தவனும், இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளைத் தரிசிக்கவும் முடியும்.
Muladhara with its four petals, Svadhisthana with its six, Manipuraka with its ten, Anahata with its twelve, and, along with these marks that are the chakras standing upon the Sushumna channel, Vishuddhi with its sixteen: passing beyond them, one sees the blue flame that is the ground for seeing the sacred feet of God. Then, at the middle of the brow between the eyebrows, at the Ajna chakra which is the first place at which deeds come to an end, both kinds of deed that are the cause of birth, the good and the evil, depart. And so it becomes possible to behold the sacred feet of God, who made time itself and who has seen and known all three times, the past, the present and the future.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும்,
Muladhara with its four petals, Svadhisthana with its six, Manipuraka with its ten, and Anahata with its twelve,
- வரி 2Line 2
சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்தச் சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுத்தியும் தாண்டி,
and, along with these marks that are the chakras standing upon the Sushumna channel, Vishuddhi with its sixteen: passing beyond them all,
- வரி 3Line 3
இறைவனின் திருவடிகளைக் காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியைக் கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில், வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில், பிறவிக்குக் காரணமாகிய நல்வினை தீவினை ஆகிய இரண்டும் நீங்கிவிட,
one sees the blue flame that is the ground for seeing the sacred feet of God; and at the middle of the brow between the eyebrows, at the Ajna chakra which is the first place at which deeds come to an end, both kinds of deed that cause birth, the good and the evil, depart.
- வரி 4Line 4
காலத்தைப் படைத்தவனும், இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளைத் தரிசிக்கவும் முடியும்.
And so it becomes possible to behold the sacred feet of God, who made time itself and who has seen and known all three times, the past, the present and the future.




