தொடர்ந்து படிக்கread this section continuously
மேதாதி யாலே விடாதோமெனத் தூண்டியாதார சோதனை யத்துவ சோதனைதாதார மாகவே தானெழச் சாதித்தாலாதாரஞ் செய்ப்போக மாவது காயமே.
உரைmeaning
உடலுக்குள் இருக்கின்ற மூல அக்கினி வேள்வியை, ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக்கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி, உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாகப் பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையும் தியானத்தின் வழியாகப் பயிற்சி செய்தும், அது தானாகவே எழுச்சி பெறும்படி சாதகம் செய்து சாதித்தால், அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாகச் செயல்பட்டு, இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும்.
Rouse and awaken the root fire that is the offering within the body, by holding God the primal one in unceasing thought through the mantra of the Omkara. Work at the six adhara chakras within the body by way of contemplation, and work at the six ways of reaching God by way of contemplation too. If the sadhana is done and accomplished so that it rises of its own accord, then that itself acts as the ground for reaching God and gives the experience of his great bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடலுக்குள் இருக்கின்ற மூல அக்கினி வேள்வியை, ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக்கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி,
Rouse and awaken the root fire that is the offering within the body, by holding God the primal one in unceasing thought through the mantra of the Omkara,
- வரி 2Line 2
உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாகப் பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையும் தியானத்தின் வழியாகப் பயிற்சி செய்தும்,
work at the six adhara chakras within the body by way of contemplation, and work at the six ways of reaching God by way of contemplation too.
- வரி 3Line 3
அது தானாகவே எழுச்சி பெறும்படி சாதகம் செய்து சாதித்தால்,
If the sadhana is done and accomplished so that it rises of its own accord,
- வரி 4Line 4
அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாகச் செயல்பட்டு, இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும்.
then that itself acts as the ground for reaching God and gives the experience of his great bliss.
திருமந்திரம் பாடல் #1708
1 / 2





