தொடர்ந்து படிக்கread this section continuously
ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்திபோதா லயாந்த விகாரந் தனிற்போதமேதாரி வாதார மீதானமுண் மையே.
உரைmeaning
பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஒடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும் ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீதும் வீற்றிருப்பது, அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே, இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும் அக்னியாகவும் முழுவதும் நிறைந்து, இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே. இதனை யாம் உரைப்பது உண்மையே ஆகும்.
In the sound that is the twelve kalais of the sun, in the subsiding in which the sixteen kalais of the moon all come to rest, and above Sahasradala at the crown of the head, which is first of all things and is the boundary of sound, what is seated is the Supreme, the moving power. Within the body, the temple in which the divine power seated there as knowledge itself dwells, that same divine power fills the souls of living beings, which stand apart from it, wholly as wisdom and as fire, and it is that same divine power which is also the six adharas within this body. What we say here is the truth.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஒடுங்குகின்ற மயத்திலும்,
In the sound that is the twelve kalais of the sun, and in the subsiding in which the sixteen kalais of the moon all come to rest,
- வரி 2Line 2
தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும் ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீதும் வீற்றிருப்பது, அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும்.
and above Sahasradala at the crown of the head, which is first of all things and is the boundary of sound, what is seated is the Supreme, the moving power.
- வரி 3Line 3
அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே, இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும்,
Within the body, the temple in which the divine power seated there as knowledge itself dwells, that power fills the souls of living beings, which stand apart from it, as wisdom,
- வரி 4Line 4
அக்னியாகவும் முழுவதும் நிறைந்து, இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே; இதனை யாம் உரைப்பது உண்மையே ஆகும்.
and as fire, filling them wholly; and it is that same divine power which is also the six adharas within this body. What we say here is the truth.
திருமந்திரம் பாடல் #1705
1 / 2





