திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1706

ஏழாம் தந்திரம்1. ஆறு ஆதாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்தானென்று நானென்றுந் தன்மைக ளோராறுபாரெங்கு மாகிப் பரந்த பராபரங்காரொன்று கற்பக மாகிநின் றானே.

உரை

மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாகப் பிரித்துப் பார்ப்பது இல்லாமல், அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும்பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாகத் தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற அசையாச் சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரைத் தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்திருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே, உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாகப் பிரித்துப் பார்ப்பது இல்லாமல், அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும்பொழுது,

  • வரி 2

    தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாகத் தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும்,

  • வரி 3

    உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற அசையாச் சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால்,

  • வரி 4

    வேரால் பருகிய நீரைத் தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்திருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே, உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.

திருமந்திரம் பாடல் #1706

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout