திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1710

ஏழாம் தந்திரம்1. ஆறு ஆதாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்போகு முடம்பும் பொருந்திய வாறுதானாகிய வக்கர மைம்பது தத்துவமாகு முடம்புக்கு மாறந்த மாமே.

உரை

ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிப்பதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில், ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பிப் போகும்படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்திருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கியிருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும், அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிப்பதும் ஆகும்; உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில்,

  • வரி 2

    ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பிப் போகும்படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்திருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும்.

  • வரி 3

    அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும்; அந்த எழுத்துக்களுக்குள் அடங்கியிருப்பது ஐம்பது தத்துவங்களாகும்.

  • வரி 4

    இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும், அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1710

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout