திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1720

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

துன்றுந் தயிர்நெய் பால்தூய மெழுகுடன்கன்றிய செப்புக் கனலிரதஞ் சலம்வன்றிறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

உரை

முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும், இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம் போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும், வலிமையாகச் சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும், மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது, மனதைத் தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும்,

  • வரி 2

    இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம் போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும்,

  • வரி 3

    வலிமையாகச் சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும்,

  • வரி 4

    மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது, மனதைத் தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1720

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout