தொடர்ந்து படிக்கread this section continuously
முத்துடன் மாணிக்க மொய்த்த பவளமுங்கொத்து மக்கொம்பு சிலைநீறு கோமளமத்தன்றன் னாகம மன்ன மரிசியாமுத்தத்தின் சாதனம் பூமண லிங்கமே.
உரைmeaning
முத்துக் கல்லும், மாணிக்கக் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும், கொத்துகின்ற உளியும் அதைத் தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற கருவிகளால் செதுக்கப்பட்ட சிலையில், திரு நீறும் கோமேதகக் கல்லும் அணிவித்து, அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி, சமைக்கப்பட்ட உணவும் சமைக்கப்படாத அரிசியும் படையலாக வைத்து, மனதை ஒருமுகப்படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப்பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்.
Pearl stone, ruby stone and the coral stone that is their equal, and the statue carved with tools such as the chisel that cuts and the hammer that helps to strike it: on that statue sacred ash and gomedhagam stone are placed. Then, as the Siva Agamam that God the father of all granted to his souls sets out, cooked food and uncooked rice are set before it as an offering. And with the fragrance that rises from the flower garland placed on it as an instrument that gathers the mind to one point, what is composed in this way is the complete Siva lingam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முத்துக் கல்லும், மாணிக்கக் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும்,
Pearl stone, ruby stone, and the coral stone that is their equal,
- வரி 2Line 2
கொத்துகின்ற உளியும் அதைத் தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற கருவிகளால் செதுக்கப்பட்ட சிலையில், திரு நீறும் கோமேதகக் கல்லும் அணிவிக்கப்படுகின்றன.
and on the statue carved with tools such as the chisel that cuts and the hammer that helps to strike it, sacred ash and gomedhagam stone are placed.
- வரி 3Line 3
அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி, சமைக்கப்பட்ட உணவும் சமைக்கப்படாத அரிசியும் படையலாக வைக்கப்படுகின்றன.
As the Siva Agamam that God the father of all granted to his souls sets out, cooked food and uncooked rice are set before it as an offering.
- வரி 4Line 4
மனதை ஒருமுகப்படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப்பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்.
And with the fragrance that rises from the flower garland placed on it as an instrument that gathers the mind to one point, what is composed in this way is the complete Siva lingam.
திருமந்திரம் பாடல் #1719
1 / 2





