திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1718

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தூய விமானமுந் தூலம தாகுமாலாய சதாசிவ மாகுநற் சூக்குமமாய பெலிபீடம் பத்திர லிங்கமாமாய வரனிலை யாய்ந்துகொள்வார் கட்கே.

உரை

விமானம் என்று அழைக்கப்படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியாகிய பாணமானது, தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையைத் தருகின்ற தூல வடிவமே ஆகி, பிரபஞ்சமாகிப் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது. ஆதலால், இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற ஆவுடையார், பரம்பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையைக் கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது, தம்மிடம் வேண்டி வருபவர்களைப் பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    விமானம் என்று அழைக்கப்படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியாகிய பாணமானது, தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையைத் தருகின்ற தூல வடிவமே ஆகி, பிரபஞ்சமாகிப் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது.

  • வரி 2

    ஆதலால், இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற ஆவுடையார், பரம்பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக, உலகத்திற்கு நன்மையைக் கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது.

  • வரி 3

    இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது, தம்மிடம் வேண்டி வருபவர்களைப் பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது.

  • வரி 4

    இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்.

திருமந்திரம் பாடல் #1718

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout