திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1721

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மறையவ ரற்சனை வண்படி கந்தானிறையவ ரற்சனை யேயபொன் னாகுங்குறைவில் வசீகர கோமள மாகுந்துறையுடைச் சூத்திரர் தொல்வாண் லிங்கமே.

உரை

வேதங்களை உச்சரித்துச் சாதகர்கள் பூசை செய்கின்ற போது, வடிவாக அமைக்கப்பட்ட படிக இலிங்கம் தான் பெற்ற மந்திரங்களைப் பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும். இறைவன் மேல் பக்தியோடு சாதகர்கள் பூசை செய்கின்ற போது, அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்பப் பொன் போல ஒளி வீசி அமைதியைக் கொடுக்கக் கூடியது ஆகும். அப்போது அது, ஒரு குறையும் இல்லாத, சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய பேரழகு பெற்ற இலிங்கமாக ஆகும். இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக ஏற்றுக் கொண்டு, அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு, இவை எல்லாம் ஆதியிலிருந்தே இருக்கின்ற ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய, ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்.

வரி வாரியாக

  • வரி 1

    வேதங்களை உச்சரித்துச் சாதகர்கள் பூசை செய்கின்ற போது, வடிவாக அமைக்கப்பட்ட படிக இலிங்கம் தான் பெற்ற மந்திரங்களைப் பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும்.

  • வரி 2

    இறைவன் மேல் பக்தியோடு சாதகர்கள் பூசை செய்கின்ற போது, அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்பப் பொன் போல ஒளி வீசி அமைதியைக் கொடுக்கக் கூடியது ஆகும்.

  • வரி 3

    அப்போது அது, ஒரு குறையும் இல்லாத, சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய பேரழகு பெற்ற இலிங்கமாக ஆகும்.

  • வரி 4

    இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக ஏற்றுக் கொண்டு அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு, இவை எல்லாம் ஆதியிலிருந்தே இருக்கின்ற ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்.

திருமந்திரம் பாடல் #1721

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout