தொடர்ந்து படிக்கread this section continuously
அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடியெதுவுணரா வகை நின்றன னீசன்புதுவுணர் வான புவனங்க ளெட்டுமிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.
உரைmeaning
அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை, ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை உணராத ஒரு புதுவிதமான உணர்வாக, அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை உள்ளே உணர்ந்தேன். அப்போது அவன் என் உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.
I came to realize the supreme being who is present in all things by seeking him in the lingam form that has the nature of a light. God stands in such a way that no method can realize him. When he is realized through the lingam filled with light, I felt within me, as a wholly new feeling I had never known until then, the nature that goes out and reaches all the worlds. And at that moment he took my very body as the temple he desired and sat enthroned in it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை, ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன்.
I came to realize the supreme being who is present in all things by seeking him in the lingam form that has the nature of a light.
- வரி 2Line 2
எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்றான் இறைவன்.
God stands in such a way that no method can realize him.
- வரி 3Line 3
ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் அவனை உணரும் போது, இது வரை உணராத ஒரு புதுவிதமான உணர்வாக, அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை உள்ளே உணர்ந்தேன்.
When he is realized through the lingam filled with light, I felt within me, as a wholly new feeling I had never known until then, the nature that goes out and reaches all the worlds.
- வரி 4Line 4
அப்போது அவன் என் உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.
At that moment he took my very body as the temple he desired and sat enthroned in it.
திருமந்திரம் பாடல் #1722
1 / 2





