திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1723

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அகலிட மாயறி யாம லடங்குமுகலிட மாய்நின்ற ஊனதி னுள்ளேபகலிட மாமுன்னம் பாவ வினாசன்புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

உரை

அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக, யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள், அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான், புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக, யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள்,

  • வரி 2

    அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான்.

  • வரி 3

    அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்தான்.

  • வரி 4

    யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான், புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.

திருமந்திரம் பாடல் #1723

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout