திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1724

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

போது புனைகழல் பூமிய தாவதுமாது புனைமுடி வானக மாவதுநீதியு ளீசனுடல் விசும்பாய் நிற்குமாதியுற நின்றது அப்பரி சாமே.

உரை

மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றன. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்திருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது, அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றன.

  • வரி 2

    இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்திருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது.

  • வரி 3

    தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது.

  • வரி 4

    ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது, அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1724

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout