திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1725

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாய்த்திரைபொரு நீரது மஞ்சன மாலைவரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலைகரையற்ற நந்தி கலையுந்திக் காமே.

உரை

நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள், இறைவனுக்குச் சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள். அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாகச் சாற்றிக் கொண்டே இருக்கின்றன. மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களில் உள்ள தூய்மையான நீர், இறைவனுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றன. எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்துத் திசைகளும் இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள், இறைவனுக்குச் சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள்.

  • வரி 2

    அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாகச் சாற்றிக் கொண்டே இருக்கின்றன.

  • வரி 3

    மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களில் உள்ள தூய்மையான நீர் இறைவனுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது; வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றன.

  • வரி 4

    எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்துத் திசைகளும் இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #1725

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout