தொடர்ந்து படிக்கread this section continuously
தத்துவ மாவ தருவஞ் சராசரந்தத்துவ மாவ துருவஞ் சுகோதையதத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.
உரைmeaning
உருவம் இல்லாமல், அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதும் முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.
What is present in everything, in moving things and unmoving things alike, without any form of its own; and what gives form to all the living beings of the world and stands as the ground on which they undergo their pleasures and pains; and what stands as everything there is in the worlds and among all their moving and unmoving beings: that is the thirty-six principles. And what stands as those thirty-six principles is the supreme being Sadasivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உருவம் இல்லாமல், அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பது முப்பத்தாறு தத்துவங்களாகும்.
What is present in everything, in moving things and unmoving things alike, without any form of its own, is the thirty-six principles.
- வரி 2Line 2
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து, அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும் அவையே ஆகும்.
They are also what gives form to all the living beings of the world and stands as the ground on which they undergo their pleasures and pains.
- வரி 3Line 3
அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் நிற்பதும் அவையே ஆகும்.
They are also what stands as everything there is in the worlds and among all their moving and unmoving beings.
- வரி 4Line 4
இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.
What stands as those thirty-six principles is the supreme being Sadasivam.
திருமந்திரம் பாடல் #1738
1 / 2





