திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1737

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

உரை

சக்தி பூமியாகிய நிலத்திலும், சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்திலும் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாகச் சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும், சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சக்தி பூமியாகிய நிலத்திலும், சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்திலும் இருக்கின்றார்கள்.

  • வரி 2

    சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாகச் சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றார்கள்.

  • வரி 3

    சக்தி உருவமாகவும், சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள்.

  • வரி 4

    சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1737

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout