தொடர்ந்து படிக்கread this section continuously
அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுளவஞ்சி னோடைந்து கரதலந் தானுளவஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.
உரைmeaning
சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளன. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளன. அவருக்குப் பத்துத் திருக்கரங்கள் உள்ளன. அந்தப் பத்துத் திருக்கரங்களிலும், தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாகப் பத்து விதமான ஆயுதங்கள் உள்ளன. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன், தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.
The supreme being Sadasivam has five sacred faces. On those five sacred faces there are fifteen sacred eyes in all, three to each face. He has ten sacred hands. In those ten sacred hands there are ten kinds of weapon, which are the instruments by which he guards his devotees. God, who stands in this way as the Sadasiva lingam, enters the hearts of the devotees who trust him and stands there filling them completely.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளன; அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளன.
The supreme being Sadasivam has five sacred faces, and on those five sacred faces there are fifteen sacred eyes in all, three to each face.
- வரி 2Line 2
அவருக்குப் பத்துத் திருக்கரங்கள் உள்ளன.
He has ten sacred hands.
- வரி 3Line 3
அந்தப் பத்துத் திருக்கரங்களிலும், தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாகப் பத்து விதமான ஆயுதங்கள் உள்ளன.
In those ten sacred hands there are ten kinds of weapon, which are the instruments by which he guards his devotees.
- வரி 4Line 4
இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன், தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.
God, who stands in this way as the Sadasiva lingam, enters the hearts of the devotees who trust him and stands there filling them completely.
திருமந்திரம் பாடல் #1736
1 / 2





