திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1739

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கூறுமி னூறு சதாசிவ னெம்மிறைவேறோரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்குமேறுகை செய்தொழில் வானவர் தம்மோடுமாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

உரை

எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும். அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாகத் திருவிளையாடல்கள் செய்து, அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான். உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து, அதன் பயனால் மேலான நிலைக்குச் சென்று, உலக இயக்கத்திற்காகப் பல தொழில்களைப் புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருந்து, தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதைச் செய்கின்றான். சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற அந்த இறைவன் எமது மனதில் புகுந்தான்.

வரி வாரியாக

  • வரி 1

    எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும்.

  • வரி 2

    அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாகத் திருவிளையாடல்கள் செய்து, அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான்.

  • வரி 3

    உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து, அதன் பயனால் மேலான நிலைக்குச் சென்று, உலக இயக்கத்திற்காகப் பல தொழில்களைப் புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருக்கின்றான்.

  • வரி 4

    அவர்களோடு சேர்ந்து தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதைச் செய்கின்றான்; சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற அந்த இறைவன் எமது மனதில் புகுந்தான்.

திருமந்திரம் பாடல் #1739

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout