தொடர்ந்து படிக்கread this section continuously
சமையத் தெழுந்த வவத்தை யீரைந்துளசமையத் தெழுந்த விராசி யீராறுளசமையத் தெழுந்த சதிர் ரீரெட்டுளசமையத் தெழுந்த சதாசிவன் றானே.
உரைmeaning
இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிலிருந்து எழுவது, ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலால் அவத்தைகளும், ஐந்து விதமான கீழால் அவத்தைகளும், பன்னிரண்டு இராசிகளும், இறையருளால் கிடைக்கக் கூடிய பதினாறு விதமான பேறுகளும் ஆகும். இந்தச் சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும்.
What rises from the samayams, the six kinds of way by which God is reached, is the five kinds of upper avasthai and the five kinds of lower avasthai that souls must undergo, and the twelve signs of the zodiac, and the sixteen kinds of boon that can come by the grace of God. And all these samayams are themselves the supreme being Sadasivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிலிருந்து எழுவது, ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலால் அவத்தைகளும், ஐந்து விதமான கீழால் அவத்தைகளும் ஆகும்.
What rises from the samayams, the six kinds of way by which God is reached, is the five kinds of upper avasthai and the five kinds of lower avasthai that souls must undergo.
- வரி 2Line 2
அந்தச் சமயங்களிலிருந்து எழுவது பன்னிரண்டு இராசிகளும் ஆகும்.
What rises from those samayams is also the twelve signs of the zodiac.
- வரி 3Line 3
அந்தச் சமயங்களிலிருந்து எழுவது, இறையருளால் கிடைக்கக் கூடிய பதினாறு விதமான பேறுகளும் ஆகும்.
What rises from those samayams is also the sixteen kinds of boon that can come by the grace of God.
- வரி 4Line 4
இந்தச் சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும்.
All these samayams are themselves the supreme being Sadasivam.
திருமந்திரம் பாடல் #1734
1 / 2





