தொடர்ந்து படிக்கread this section continuously
அத்திசைக் குள்ளே யமர்ந்தன வாறங்கமத்திசைக் குள்ளே யமர்ந்தன நால்வேதமத்திசைக் குள்ளே யமர்ந்த சரிதையோடத்திசைக் குள்ளே யமைந்த சமையமே.
உரைmeaning
அண்ட சராசரங்களில் உள்ள பத்துத் திசைகளுக்கு உள்ளே, பாடல் #55 இல் உள்ளபடி வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவையும், நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும், இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும், பாடல் #994 இல் உள்ளபடி இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.
Within the ten directions of the worlds and all their moving and unmoving beings are seated the six limbs of the Vedas, as verse 55 sets out, which are Siksha, Vyakarana, Chandas, Jyotisha, Nirukta and Kalpa; and the four Vedas, which are Rig, Sama, Yajur and Atharvana; and the four ways of reaching God, which are sariyai, kiriyai, yogam and gnanam; and the six samayams by which God is reached, as verse 994 sets out, which are dhyanam, jebam, poojai, chakkaram, gnanam and buddhi.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அண்ட சராசரங்களில் உள்ள பத்துத் திசைகளுக்கு உள்ளே, பாடல் #55 இல் உள்ளபடி வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவை அமர்ந்து இருக்கின்றன.
Within the ten directions of the worlds and all their moving and unmoving beings are seated the six limbs of the Vedas, as verse 55 sets out, which are Siksha, Vyakarana, Chandas, Jyotisha, Nirukta and Kalpa.
- வரி 2Line 2
அந்தத் திசைகளுக்கு உள்ளேயே நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.
Within those same directions are seated the four Vedas, which are Rig, Sama, Yajur and Atharvana.
- வரி 3Line 3
அந்தத் திசைகளுக்கு உள்ளேயே இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.
Within those same directions are seated the four ways of reaching God, which are sariyai, kiriyai, yogam and gnanam.
- வரி 4Line 4
அந்தத் திசைகளுக்கு உள்ளேயே, பாடல் #994 இல் உள்ளபடி இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமைந்து இருக்கின்றன.
Within those same directions are set the six samayams by which God is reached, as verse 994 sets out, which are dhyanam, jebam, poojai, chakkaram, gnanam and buddhi.
திருமந்திரம் பாடல் #1733
1 / 2





