திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1750

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்மேனி தான்சிவ லிங்கமாய் நின்றிடுந்தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்தன்மேனியில் தானாகுந் தற்பரந் தானே.

உரை

முந்தைய பாடலில் சொன்னபடி, அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தைத் தமக்குள்ளேயே உணர்ந்துகொண்ட அடியவரின் உடலானது, தானே சிவ இலிங்கமாக நிற்கும். அந்த அடியவர், தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம்பொருளாகவே நிற்பார். அடியவர் தமது உடலே சிவனாகவும், தமது உடலுக்குள்ளேயே சிவப் பேரின்பமாகவும் ஆகிவிடுவார். இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது, தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தைத் தமக்குள்ளேயே உணர்ந்துகொண்ட அடியவரின் உடலானது, தானே சிவ இலிங்கமாக நிற்கும்.

  • வரி 2

    அந்த அடியவர், தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம்பொருளாகவே நிற்பார்.

  • வரி 3

    அடியவர் தமது உடலே சிவனாகவும், தமது உடலுக்குள்ளேயே சிவப் பேரின்பமாகவும் ஆகிவிடுவார்.

  • வரி 4

    இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது, தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1750

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout