தொடர்ந்து படிக்கread this section continuously
ஆரு மறியா ரகார மதாவதுபாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்தார மிரண்டுந் தரணி முழுதுமாய்மாறி யெழுந்திடு மோசைய தாமே.
உரைmeaning
சாதனையின் மூலம் தமக்குள் இருக்கின்ற இறைவனை உணராத எவரும், ஓங்காரத்தில் இருக்கின்ற அகாரம் எனும் அருளாக இருப்பது எது என்பதை அறிந்துகொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற உகாரம் எனும் அருளைப் பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியைத் தமக்குள் தேடி உணர்ந்தால், அது பிரணவமாக, உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று இரண்டுமாக, உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய், தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.
No one who has not realized through their discipline the God who is within them will know what it is that stands as the grace called the letter a (அ) in the Omkara. But if one seeks within oneself and realizes the divine power that divided and apportioned the grace called the letter u (உ) in the Omkara, which is in the world as well, then that is the sound which, as the Pranava, fills the whole world as both, as divine power within and as divine power without, and which rises up changing from within oneself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதனையின் மூலம் தமக்குள் இருக்கின்ற இறைவனை உணராத எவரும், ஓங்காரத்தில் இருக்கின்ற அகாரம் எனும் அருளாக இருப்பது எது என்பதை அறிந்துகொள்ள மாட்டார்கள்.
No one who has not realized through their discipline the God who is within them will know what it is that stands as the grace called the letter a (அ) in the Omkara.
- வரி 2Line 2
உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற உகாரம் எனும் அருளைப் பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியைத் தமக்குள் தேடி உணர்ந்தால்,
But if one seeks within oneself and realizes the divine power that divided and apportioned the grace called the letter u (உ) in the Omkara, which is in the world as well,
- வரி 3Line 3
அது பிரணவமாக, உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று இரண்டுமாக, உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்கும்.
then that, as the Pranava, fills the whole world as both, as divine power within and as divine power without.
- வரி 4Line 4
அதுவே தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.
And that is the sound which rises up changing from within oneself.
திருமந்திரம் பாடல் #1751
1 / 2





