தொடர்ந்து படிக்கread this section continuously
இலிங்க நற்பீட மிசையு மோங்காரமிலிங்கம் நற்கண்டம் நிறையு மகாரமிலிங்கத்து வட்ட முறையு முகாரமிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.
உரைmeaning
அருவமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில், நன்மை தருகின்ற பீடப் பகுதியானது, அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது, அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் அகார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது, அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் உகார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் உகார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே, வெளிச்சமும் சத்தமும் ஆகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.
In the lingam form of Sadasivamurthy, who is without form, the pedestal that gives good is the principle of the Omkara, which acts joined with all things. The shaft that stands at its centre is the principle of the letter a (அ) of the Omkara, which is spread and filled through all things. The circle in it is the principle of the letter u (உ) of the Omkara, which dwells within all things. And what fills the lingam form as the letter u (உ) is the vindhu and nada principle of the supreme being, which is light and which is sound.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அருவமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில், நன்மை தருகின்ற பீடப் பகுதியானது, அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும்.
In the lingam form of Sadasivamurthy, who is without form, the pedestal that gives good is the principle of the Omkara, which acts joined with all things.
- வரி 2Line 2
அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது, அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் அகார எழுத்தின் தத்துவமாகும்.
The shaft that stands at its centre is the principle of the letter a (அ) of the Omkara, which is spread and filled through all things.
- வரி 3Line 3
அதில் இருக்கின்ற வட்டமானது, அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் உகார எழுத்தின் தத்துவமாகும்.
The circle in it is the principle of the letter u (உ) of the Omkara, which dwells within all things.
- வரி 4Line 4
இலிங்க வடிவத்தில் உகார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே, வெளிச்சமும் சத்தமும் ஆகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.
And what fills the lingam form as the letter u (உ) is the vindhu and nada principle of the supreme being, which is light and which is sound.
திருமந்திரம் பாடல் #1752
1 / 2





