திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1753

ஏழாம் தந்திரம்5. ஆத்ம லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அகார முதலா யனைத்துமாய் நிற்குமுகார முதலா யுயிர்ப்பெய்து நிற்குமகார வுகார மிரண்டு மறியிலகார வுகார மிலிங்கம தாமே.

உரை

ஓங்கார தத்துவத்தில் அகார எழுத்தின் முதலாகி அனைத்துமாக நிற்பதுவும், உகார எழுத்தின் முதலாகி அனைத்து உயிர்களின் இயக்கமாக நிற்பதுவும், அகார எழுத்தின் தத்துவமும் உகார எழுத்தின் தத்துவமும் ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை, உள்ளுக்குள் உணர்ந்து அறிந்துகொண்டால், அந்த அகார எழுத்தாகவும் உகார எழுத்தாகவும் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளின் இலிங்க வடிவமே ஆத்மா ஆகும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    ஓங்கார தத்துவத்தில் அகார எழுத்தின் முதலாகி அனைத்துமாக நிற்பதுவும்,

  • வரி 2

    உகார எழுத்தின் முதலாகி அனைத்து உயிர்களின் இயக்கமாக நிற்பதுவும்,

  • வரி 3

    அகார எழுத்தின் தத்துவமும் உகார எழுத்தின் தத்துவமும் ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை, உள்ளுக்குள் உணர்ந்து அறிந்துகொண்டால்,

  • வரி 4

    அந்த அகார எழுத்தாகவும் உகார எழுத்தாகவும் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளின் இலிங்க வடிவமே ஆத்மா ஆகும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

திருமந்திரம் பாடல் #1753

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout