தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதார மாதெய்வ மாகின்ற விந்துவுமேதாதி நாதமு மீதே விரிந்தனவாதார விந்து வதிபீட நாதமேபோதா விலிங்கப் புணர்ச்சியது ஆமே.
உரைmeaning
அனைத்திற்கும் ஆதாரமாகிய மாபெரும் தெய்வமாக இருக்கின்ற விந்து எனும் வெளிச்சச் சக்தியும், அதற்கு மேலாக ஆதியிலிருந்தே இருக்கின்ற நாதம் எனும் சத்தச் சக்தியும், ஒன்றன் மீது ஒன்றாகவே அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றன. இதில், ஆதாரமாகிய விந்து சக்திக்கு மேன்மை தருகின்ற பீடமே நாத சக்தி ஆகும். எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகளும் இலிங்க வடிவத்தில் கலந்து இருக்கின்ற நிலையே ஆத்ம இலிங்கம் ஆகும்.
The power of vindhu, which is light and which stands as the great deity that is the support of all, and above it the power of nada, which is sound and which has been from the very beginning, are spread and expanded through all things, the one upon the other. Of these two, the pedestal that gives eminence to the power of vindhu, which is the support, is the power of nada. And the state in which these two powers, which never part from each other, mingle together in the lingam form is the atma lingam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் ஆதாரமாகிய மாபெரும் தெய்வமாக இருக்கின்ற விந்து எனும் வெளிச்சச் சக்தியும்,
The power of vindhu, which is light and which stands as the great deity that is the support of all,
- வரி 2Line 2
அதற்கு மேலாக ஆதியிலிருந்தே இருக்கின்ற நாதம் எனும் சத்தச் சக்தியும், ஒன்றன் மீது ஒன்றாகவே அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றன.
and above it the power of nada, which is sound and which has been from the very beginning, are spread and expanded through all things, the one upon the other.
- வரி 3Line 3
இதில், ஆதாரமாகிய விந்து சக்திக்கு மேன்மை தருகின்ற பீடமே நாத சக்தி ஆகும்.
Of these two, the pedestal that gives eminence to the power of vindhu, which is the support, is the power of nada.
- வரி 4Line 4
எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகளும் இலிங்க வடிவத்தில் கலந்து இருக்கின்ற நிலையே ஆத்ம இலிங்கம் ஆகும்.
And the state in which these two powers, which never part from each other, mingle together in the lingam form is the atma lingam.
திருமந்திரம் பாடல் #1754
1 / 2





