திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1755

ஏழாம் தந்திரம்5. ஆத்ம லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி சிவமா மிலிங்கமே தாபரஞ்சத்தி சிவமா மிலிங்கமே சங்கமஞ்சத்தி சிவமா மிலிங்கஞ் சதாசிவஞ்சத்தி சிவமா குந்தற்பரந் தானே.

உரை

முந்தைய பாடலில் சொன்னபடி, எப்போதும் பிரியாமல் இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கமே உடலாக இருக்கின்றது. இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற அந்த ஆத்ம இலிங்கத்தில், உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றன. இப்படி மூன்றும் கலந்து பிண்டத்தில் இருக்கின்ற ஆத்ம இலிங்கமே, அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது. இப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கின்ற ஆத்ம இலிங்கமானது, தானாகவே அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    எப்போதும் பிரியாமல் இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கமே உடலாக இருக்கின்றது.

  • வரி 2

    அந்த ஆத்ம இலிங்கத்தில், உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றன.

  • வரி 3

    இப்படி மூன்றும் கலந்து பிண்டத்தில் இருக்கின்ற ஆத்ம இலிங்கமே, அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது.

  • வரி 4

    இப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கின்ற ஆத்ம இலிங்கமானது, தானாகவே அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1755

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout