திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1756

ஏழாம் தந்திரம்5. ஆத்ம லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம்பானே ரெழுகின்ற வைம்பதம் வந்திடிற்பூனே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன்றானே யெழுந்த வகாரமது ஆமே.

உரை

முந்தைய பாடலில் சொன்னபடி தானாகவே இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்துகொண்டவர்கள், தமக்குள் இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து நேராக எழுந்து மேலே வருகின்ற ஜோதியைக் காணலாம். அப்போது, அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்பச் சரிசமமாக எழுந்து இருக்கின்ற இறைவனுடைய ஐந்து பூதங்களும் தமக்குள்ளும் இருக்கின்றன என்கின்ற உணர்வு வந்துவிட்டால், சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில், சுழுமுனை நாடிக்கு நேராக எழுகின்ற, பொன் போலப் பிரகாசிக்கும் கொடியாக வீற்றிருக்கும் இறைவியுடன், தாமாகவே எப்போதும் சேர்ந்தே எழுந்தருளும் இறைவனை உணரலாம். ஓங்காரத்தில் அகார எழுத்தாக இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் இதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தானாகவே இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்துகொண்டவர்கள், தமக்குள் இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து நேராக எழுந்து மேலே வருகின்ற ஜோதியைக் காணலாம்.

  • வரி 2

    அப்போது, அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்பச் சரிசமமாக எழுந்து இருக்கின்ற இறைவனுடைய ஐந்து பூதங்களும் தமக்குள்ளும் இருக்கின்றன என்கின்ற உணர்வு வந்துவிட்டால்,

  • வரி 3

    சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில், சுழுமுனை நாடிக்கு நேராக எழுகின்ற, பொன் போலப் பிரகாசிக்கும் கொடியாக வீற்றிருக்கும் இறைவியுடன், தாமாகவே எப்போதும் சேர்ந்தே எழுந்தருளும் இறைவனை உணரலாம்.

  • வரி 4

    ஓங்காரத்தில் அகார எழுத்தாக இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் இதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1756

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout