தொடர்ந்து படிக்கread this section continuously
விந்துவு நாதமு மேவு மிலிங்கமாம்விந்து வதேபீடம் நாத மிலிங்கமாமந்த விரண்டையு மாதார தெய்வமாய்வந்த கருவைந்துஞ் செய்யுமவை யைந்தே.
உரைmeaning
விந்து எனும் வெளிச்சமும் நாதம் எனும் சத்தமும் சரிசமமாகப் பொருந்தி இருப்பதே ஆத்ம இலிங்கம் ஆகும். வெளிச்சமானது அந்த இலிங்கத்தின் பீடமாகவும், சத்தமானது அந்த இலிங்கத்தின் பாணமாகவும் இருக்கின்றது. அந்த வெளிச்சம், சத்தம் ஆகிய இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற தெய்வங்களாக, ஆத்ம இலிங்கத்தில் கருவாக வந்த ஐந்து தெய்வங்களும், தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கும் உரிய ஐந்து விதமான தொழில்களைப் புரிகின்றனர்.
The atma lingam is the equal joining of vindhu, which is light, and nada, which is sound. The light stands as the pedestal of that lingam and the sound as its shaft. And resting upon those two, the light and the sound, the five deities who came as the seed in the atma lingam are seated as the deities of action, and from within it each of them performs the work that is his own, the five kinds of work in all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
விந்து எனும் வெளிச்சமும் நாதம் எனும் சத்தமும் சரிசமமாகப் பொருந்தி இருப்பதே ஆத்ம இலிங்கம் ஆகும்.
The atma lingam is the equal joining of vindhu, which is light, and nada, which is sound.
- வரி 2Line 2
வெளிச்சமானது அந்த இலிங்கத்தின் பீடமாகவும், சத்தமானது அந்த இலிங்கத்தின் பாணமாகவும் இருக்கின்றது.
The light stands as the pedestal of that lingam and the sound as its shaft.
- வரி 3Line 3
அந்த வெளிச்சம், சத்தம் ஆகிய இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற தெய்வங்களாக,
And resting upon those two, the light and the sound, are seated the deities of action,
- வரி 4Line 4
ஆத்ம இலிங்கத்தில் கருவாக வந்த ஐந்து தெய்வங்களும், தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கும் உரிய ஐந்து விதமான தொழில்களைப் புரிகின்றனர்.
the five deities who came as the seed in the atma lingam, and from within it each of them performs the work that is his own, the five kinds of work in all.
திருமந்திரம் பாடல் #1757
1 / 2





