தொடர்ந்து படிக்கread this section continuously
சத்திநற் பீடந் தகுநல்ல வாத்துமாச்சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ்சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்சத்திநல் லாத்துமாச் சதாசிவந் தானே.
உரைmeaning
முந்தைய பாடலில் சொன்னபடி, ஆத்ம இலிங்கத்திற்கு உள்ளிருந்து ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது, நன்மையான ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி நன்மையைக் கொடுத்துச் செயல்படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி செயல்படுகின்ற ஞான தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி செயல்படுகின்ற சிவ தத்துவமாக இருக்கின்றது. இப்படி ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியாகிய, நன்மையைக் கொடுக்கின்ற ஆத்ம இலிங்கமே, அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகத் தானே இருக்கின்றது.
As told in the previous verse, the divine power that performs the five works from within the atma lingam stands, in the pedestal of that good atma lingam, as the principle of the soul, which gives good and acts according to the ripeness of the seeker. In the shaft of the atma lingam it stands as the principle of knowledge, which acts according to the ripeness of the seeker. In the atma lingam itself it stands as the principle of Sivam, which acts according to the ripeness of the seeker. And that good-giving atma lingam, which is the divine power performing the five works, is itself the supreme being above all things.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆத்ம இலிங்கத்திற்கு உள்ளிருந்து ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது, நன்மையான ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி நன்மையைக் கொடுத்துச் செயல்படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது.
The divine power that performs the five works from within the atma lingam stands, in the pedestal of that good atma lingam, as the principle of the soul, which gives good and acts according to the ripeness of the seeker.
- வரி 2Line 2
ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி செயல்படுகின்ற ஞான தத்துவமாக இருக்கின்றது.
In the shaft of the atma lingam it stands as the principle of knowledge, which acts according to the ripeness of the seeker.
- வரி 3Line 3
ஆத்ம இலிங்கத்தில், சாதகரின் பக்குவத்திற்குத் தகுந்தபடி செயல்படுகின்ற சிவ தத்துவமாக இருக்கின்றது.
In the atma lingam itself it stands as the principle of Sivam, which acts according to the ripeness of the seeker.
- வரி 4Line 4
இப்படி ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியாகிய, நன்மையைக் கொடுக்கின்ற ஆத்ம இலிங்கமே, அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகத் தானே இருக்கின்றது.
And that good-giving atma lingam, which is the divine power performing the five works, is itself the supreme being above all things.
திருமந்திரம் பாடல் #1758
1 / 2





