திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1759

ஏழாம் தந்திரம்5. ஆத்ம லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்கைமனம்புகுந் தின்பம் பொழிகின்ற போதுநலம்புகுந் தென்னோடு நாதனை நாமேநிலம்புகுந் தாதியுமேல் கொண்ட வாறே.

உரை

அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகத் தமது ஆத்ம இலிங்கமே இருக்கின்ற தத்துவத்தை உணர்ந்துகொண்டவர்களின் மனதிற்குள் இறைவன் புகுந்து, அவர்களுடைய உயிரோடு பொருந்தி, வாழ்க்கையில் எப்போதும் உடன் இருந்து, அனைத்து விதமான இன்பங்களையும் வாரி வழங்கும்போது, நலங்களெல்லாம் அவர்களுக்குள் புகுந்து, அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனோடு அவர்கள் ஒன்றாகக் கலந்திருக்க, உலகத்தில் புகுந்து வீற்றிருக்கும் அந்த ஆதிப் பரம்பொருள், அவர்களுடைய ஆன்மாவை மேன்மைப்படுத்தி ஆட்கொண்டு அருளி, நன்மையின் வழியில் நடத்துகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகத் தமது ஆத்ம இலிங்கமே இருக்கின்ற தத்துவத்தை உணர்ந்துகொண்டவர்களின் மனதிற்குள் இறைவன் புகுந்து, அவர்களுடைய உயிரோடு பொருந்தி, வாழ்க்கையில் எப்போதும் உடன் இருந்து,

  • வரி 2

    அனைத்து விதமான இன்பங்களையும் வாரி வழங்கும்போது,

  • வரி 3

    நலங்களெல்லாம் அவர்களுக்குள் புகுந்து, அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனோடு அவர்கள் ஒன்றாகக் கலந்திருக்க,

  • வரி 4

    உலகத்தில் புகுந்து வீற்றிருக்கும் அந்த ஆதிப் பரம்பொருள், அவர்களுடைய ஆன்மாவை மேன்மைப்படுத்தி ஆட்கொண்டு அருளி, நன்மையின் வழியில் நடத்துகின்றான்.

திருமந்திரம் பாடல் #1759

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout