தொடர்ந்து படிக்கread this section continuously
பராபர னெந்தை பனிமதி சூடித்தராபரன் தன்னடி யார்மனங் கோயில்சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னுமராமரன் மன்னி மனத்துறைந் தானே.
உரைmeaning
அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும், எமது தந்தையானவனும், தன் தலையில் குளிர்ச்சியான நிலவைச் சூடிக்கொண்டு இருப்பவனும், உலகங்களுக்கெல்லாம் தலைவனானவனும், தமது அடியார்களின் மனதையே தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக்கொண்டு வீற்றிருப்பவனும், தேவர்களுக்கும் மேலான தேவனும், விண்ணுலகத் தேவர்களின் தலையில் நிலைபெற்று வீற்றிருப்பவனும், உருவம் இல்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன், எமக்குள் நிலைபெற்று எமது மனதிற்குள் எப்போதும் வீற்றிருந்தான்.
He who is the supreme being above all things, who is our father, who wears the cool moon upon his head, who is Lord of all the worlds, who takes the very mind of his devotees as the temple he loves and is seated there, who is the God above the gods, who stands fixed upon the heads of the celestials of the sky world, and who is the supreme being without form: that God took his place within us and was seated always within our mind.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும், எமது தந்தையானவனும், தன் தலையில் குளிர்ச்சியான நிலவைச் சூடிக்கொண்டு இருப்பவனும்,
He who is the supreme being above all things, who is our father, who wears the cool moon upon his head,
- வரி 2Line 2
உலகங்களுக்கெல்லாம் தலைவனானவனும், தமது அடியார்களின் மனதையே தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக்கொண்டு வீற்றிருப்பவனும்,
who is Lord of all the worlds, who takes the very mind of his devotees as the temple he loves and is seated there,
- வரி 3Line 3
தேவர்களுக்கும் மேலான தேவனும், விண்ணுலகத் தேவர்களின் தலையில் நிலைபெற்று வீற்றிருப்பவனும்,
who is the God above the gods, who stands fixed upon the heads of the celestials of the sky world,
- வரி 4Line 4
உருவம் இல்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன், எமக்குள் நிலைபெற்று எமது மனதிற்குள் எப்போதும் வீற்றிருந்தான்.
and who is the supreme being without form: that God took his place within us and was seated always within our mind.
திருமந்திரம் பாடல் #1760
1 / 2





