திருமூலர் அருளிய திருமந்திரம்
திருமூலர்

பாயிரம் பாடல் 73–94 (22 பாடல்கள்)

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டுபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்துஅந்தி மதிபுனை அரனடி நாடொறும்சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

இருந்தவக் காரணம் கேளிந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கிஉதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறைசீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறைசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

பின்னைநின் றென்னே பிறவி பெறுவதுமுன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்என்னைநன் றாக இறைவன் படைத்தனன்தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்குஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்துநானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடு கூடிநின் றோதலும் ஆமே.

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடிஅடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்லமுடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.

பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரைஆயத்தை அச்சிவன் தன்னை யகோசரவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கரும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பின் கயிலை வழியில்வந் தேனே.

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிஅருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்அருக்கனும் சோமனும் ஆரழல் வீசஉருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னைஇயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானைஇயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

திருமந்திரம் பாடல் #73

1 / 21

0:000:00
திருமூலர்பாடல் 73

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout