திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 85

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

உரை

இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை, இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்தேன். அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தேன். உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள்; அந்த இறைவனை அனைவரும் உள்ளுணர்வு கொண்டு அறியவே திருமந்திரத்தை வழங்கினேன். இதை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதிப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து, யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை, இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்தேன்.

  • வரி 2

    அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தேன்.

  • வரி 3

    உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள்; அந்த இறைவனை அனைவரும் உள்ளுணர்வு கொண்டு அறியவே திருமந்திரத்தை வழங்கினேன்.

  • வரி 4

    இதை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதிப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து, யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #85

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout