திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 86

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடு கூடிநின் றோதலும் ஆமே.

உரை

பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை, சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை, ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி, தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை,

  • வரி 2

    சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை,

  • வரி 3

    ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி,

  • வரி 4

    தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

திருமந்திரம் பாடல் #86

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout