திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 87

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

உரை

சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே. உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான். சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

வரி வாரியாக

  • வரி 1

    சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன்.

  • வரி 2

    ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே.

  • வரி 3

    உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான்.

  • வரி 4

    சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

திருமந்திரம் பாடல் #87

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout