திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 84

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

உரை

இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன. உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும். உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும். இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன.

  • வரி 2

    உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும்.

  • வரி 3

    உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும்.

  • வரி 4

    இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

திருமந்திரம் பாடல் #84

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout