திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 73

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டுபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்துஅந்தி மதிபுனை அரனடி நாடொறும்சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

உரை

குருநாதராக வந்த நந்தியின் இணையில்லாத திருவடிகளை என் தலைமேல் வைத்துக்கொண்டு, அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்தி, சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனைத் திருமுடியில் அணிந்த 'அரன்' எனும் இறைவனின் பெருமைகளைப் போற்றி, அவன் திருவடிகளை நாள்தோறும் சிந்தித்துத் தியானித்துக்கொண்டு, அவன் அருளிய ஆகமங்களைச் சொல்கின்றேன்.

வரி வாரியாக

  • வரி 1

    குருநாதராக வந்த நந்தியின் இணையில்லாத திருவடிகளை என் தலைமேல் வைத்துக்கொண்டு,

  • வரி 2

    அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்தி, அவரைப் போற்றி,

  • வரி 3

    சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனைத் திருமுடியில் அணிந்த 'அரன்' எனும் இறைவனின் திருவடிகளை நாள்தோறும்,

  • வரி 4

    சிந்தித்துத் தியானித்துக்கொண்டு, அவன் அருளிய ஆகமங்களைச் சொல்கின்றேன்.

திருமந்திரம் பாடல் #73

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout