திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 74

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

உரை

சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் 'சிவாகமம்' என்ற பேர் பெற்றது அந்த ஆகமம். அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல, அவரின் திருவடிகளை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டேன். ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திருநடனத்தைக் கண்டு களித்தேன். அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் 'சிவாகமம்' என்ற பேர் பெற்றது அந்த ஆகமம்.

  • வரி 2

    அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல, அவரின் திருவடிகளை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டேன்.

  • வரி 3

    ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திருநடனத்தைக் கண்டு களித்தேன்.

  • வரி 4

    அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #74

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout