திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 75

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தவக் காரணம் கேளிந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

உரை

யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள், இந்திரனே. அனைத்துவிதச் செல்வங்களையும் கொண்ட, உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன், எளிதில் செய்யமுடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் அவனுடைய திருவடிகளை நான் தொழுதபோது, எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனேயே அவனும் வந்து இருந்ததால்தான், என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

வரி வாரியாக

  • வரி 1

    யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள், இந்திரனே.

  • வரி 2

    அனைத்துவிதச் செல்வங்களையும் கொண்ட, உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன்,

  • வரி 3

    எளிதில் செய்யமுடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் அவனுடைய திருவடிகளை நான் தொழுதபோது,

  • வரி 4

    எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனேயே அவனும் வந்து இருந்ததால்தான், என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

திருமந்திரம் பாடல் #75

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout