திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 76

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கிஉதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

உரை

பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐவர் மூலம் ஐந்து தொழில் புரியும் சதாசிவமூர்த்தியின் ஆகமத் தத்துவங்களையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும், நான்மறை வேதங்களையும் யாம் அளவின்றிப் பெற்றோம். அவற்றிலேயே மனம் திளைத்து, கடந்துசெல்லும் காலத்தின்மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தேன். அப்படி இருந்தபோதும், இனியும் சென்றுகொண்டிருக்கும் காலத்தை உதாசீனப்படுத்தாமல், காலத்தின் தேவையை உடனே உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

வரி வாரியாக

  • வரி 1

    பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐவர் மூலம் ஐந்து தொழில் புரியும் சதாசிவமூர்த்தியின் ஆகமத் தத்துவங்களையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும், நான்மறை வேதங்களையும் யாம் அளவின்றிப் பெற்றோம்.

  • வரி 2

    அவற்றிலேயே மனம் திளைத்து, கடந்துசெல்லும் காலத்தின்மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தேன்.

  • வரி 3

    அப்படி இருந்தபோதும், இனியும் சென்றுகொண்டிருக்கும் காலத்தை உதாசீனப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை,

  • வரி 4

    காலத்தின் தேவையை உடனே உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

திருமந்திரம் பாடல் #76

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout