திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 77

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

உரை

எமது சீடனாகிய மாலாங்கனே, இந்த உலகத்திற்கு யான் வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள். நீல நிற மேனியைக் கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும், ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து, உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும், இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை, மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    எமது சீடனாகிய மாலாங்கனே, இந்த உலகத்திற்கு யான் வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள்.

  • வரி 2

    நீல நிற மேனியைக் கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும்,

  • வரி 3

    ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து, உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும்,

  • வரி 4

    இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை, மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

திருமந்திரம் பாடல் #77

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout