திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 78

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறைசீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

உரை

இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும், என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் உமா தேவி. பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும், சீரும் சிறப்பும் உடையவளும் அவளே. தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டிப் பசு மாடாக இருந்து தவம்புரிந்த திருஆவடுதுறைத் திருத்தலத்தில், இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே, நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும், என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் உமா தேவி.

  • வரி 2

    பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும், சீரும் சிறப்பும் உடையவளும் அவளே.

  • வரி 3

    தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டிப் பசு மாடாக இருந்து தவம்புரிந்த திருஆவடுதுறைத் திருத்தலத்தில்,

  • வரி 4

    இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே, நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #78

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout