திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 94

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னைஇயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானைஇயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

உரை

நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனின் திருநாமத்தை நான் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அவனை எனது நெஞ்சத்துள் வைத்து, இரவு பகல் பாராமல் இதைச் செய்வேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன். எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.

வரி வாரியாக

  • வரி 1

    நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனின் திருநாமத்தை நான் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

  • வரி 2

    அவனை எனது நெஞ்சத்துள் வைத்து, இரவு பகல் பாராமல் இதைச் செய்வேன்.

  • வரி 3

    விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன்.

  • வரி 4

    எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.

திருமந்திரம் பாடல் #94

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout