திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 95

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையைஆரறி வார்இந்த அகலமும் நீளமும்பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்வேரறி யாமை விளம்புகின் றேனே.

உரை

எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல். எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன். எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே. அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

வரி வாரியாக

  • வரி 1

    எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல்.

  • வரி 2

    எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன்.

  • வரி 3

    எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே.

  • வரி 4

    அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

திருமந்திரம் பாடல் #95

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout