திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 96

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

உரை

இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

  • வரி 2

    இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

  • வரி 3

    இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

  • வரி 4

    இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

திருமந்திரம் பாடல் #96

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout