திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 97

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்பின்னை உலகம் படைத்த பிரமனும்உன்னும் அவனை உணரலு மாமே.

உரை

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது. இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே. படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான். அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது.

  • வரி 2

    இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே.

  • வரி 3

    படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான்.

  • வரி 4

    அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

திருமந்திரம் பாடல் #97

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout