திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 98

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைமுத்திக் கிருந்த முனிவரும் தேவரும்ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்பத்திமை யால்இப் பயனறி யாரே.

உரை

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும், சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான். ஆனாலும், இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும்,

  • வரி 2

    முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான்.

  • வரி 3

    இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு,

  • வரி 4

    அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #98

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout