திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 99

பாயிரம்திருமந்திரத் தொகைச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

உரை

திருமூலனாகிய யான் வழங்கிய இந்த மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் இவை. யான் பெற்ற இன்பத்தை இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பினாலேயே, எம் குருநாதன் நந்தியின் அருளால் இவை வழங்கப்பெற்றன. இவற்றைக் காலையில் எழுந்து பொருளுணர்ந்து ஓதி, அவற்றின் கருத்துக்களைக் கடைப்பிடித்து வந்தால், உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய சதாசிவமூர்த்தியைச் சென்று அடைந்து, யான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    திருமூலனாகிய யான் வழங்கிய இந்த மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் இவை.

  • வரி 2

    யான் பெற்ற இன்பத்தை இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பினாலேயே, எம் குருநாதன் நந்தியின் அருளால் இவை வழங்கப்பெற்றன.

  • வரி 3

    இவற்றைக் காலையில் எழுந்து பொருளுணர்ந்து ஓதி, அவற்றின் கருத்துக்களைக் கடைப்பிடித்து வந்தால்,

  • வரி 4

    உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய சதாசிவமூர்த்தியைச் சென்று அடைந்து, யான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம்.

திருமந்திரம் பாடல் #99

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout