திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 100

பாயிரம்திருமந்திரத் தொகைச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்முத்தி முடிவிது மூவா யிரத்திலேபுத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொதுவைத்த சிறப்புத் தருமிவை தானே.

உரை

உயிர்கள் அனைத்தும் இறைவனை உணர்ந்து வீடுபேறு அடைய வேண்டும் என்கின்ற அன்பினால், யாம் உயிர்களுக்கு வைத்த பேரின்பப் பரிசே திருமந்திரம் என்னும் நூலாகும். இந்த மூவாயிரம் பாடல்களில் யாம் வழங்கியிருப்பது முக்தி பெறும் வழிகளும், அதன் முடிவில் இறைவனோடு கலந்திருக்கும் பேரின்பமும் ஆகும். இறைவனின் அருளால் அறிவுப்பூர்வமாக இயற்றப்பெற்ற இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானவை. இவற்றைத் தமது சிந்தையில் வைத்து பொருளுணர்ந்து போற்றி வருபவர்களுக்கு அனைத்துவிதமான சிறப்புகளையும் இந்தத் திருமந்திரப் பாடல்கள் கொடுக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் அனைத்தும் இறைவனை உணர்ந்து வீடுபேறு அடைய வேண்டும் என்கின்ற அன்பினால், யாம் உயிர்களுக்கு வைத்த பேரின்பப் பரிசே திருமந்திரம் என்னும் நூலாகும்.

  • வரி 2

    இந்த மூவாயிரம் பாடல்களில் யாம் வழங்கியிருப்பது முக்தி பெறும் வழிகளும், அதன் முடிவில் இறைவனோடு கலந்திருக்கும் பேரின்பமும் ஆகும்.

  • வரி 3

    இறைவனின் அருளால் அறிவுப்பூர்வமாக இயற்றப்பெற்ற இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானவை.

  • வரி 4

    இவற்றைத் தமது சிந்தையில் வைத்து பொருளுணர்ந்து போற்றி வருபவர்களுக்கு அனைத்துவிதமான சிறப்புகளையும் இந்தத் திருமந்திரப் பாடல்கள் கொடுக்கும்.

திருமந்திரம் பாடல் #100

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout