திருமூலர் அருளிய திருமந்திரம்
திருமந்திரத் தொகைச் சிறப்பு

பாயிரம் பாடல் 99–100 (2 பாடல்கள்)

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்முத்தி முடிவிது மூவா யிரத்திலேபுத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொதுவைத்த சிறப்புத் தருமிவை தானே.

திருமந்திரம் பாடல் #99

1 / 2

0:000:00
திருமந்திரத் தொகைச் சிறப்புபாடல் 99

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout