திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 101

பாயிரம்குரு மட வரலாறு

தொடர்ந்து படிக்கread this section continuously

வந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

உரை

இறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த ஏழு நாதர்கள், அவரவர் இறைவனை உணர்ந்து இறை நிலையை அடைந்தனர். அந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவன் திருமூலன் எனும் யான். அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும், அத்தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் யான் வழங்கினேன். இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த ஏழு நாதர்கள்,

  • வரி 2

    அந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவன் திருமூலன் எனும் யான்.

  • வரி 3

    அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும், அத்தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் யான் வழங்கினேன்.

  • வரி 4

    இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை.

திருமந்திரம் பாடல் #101

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout